கோடை காலம் என்பதால் சிறுநீர் பாதையில் எரிச்சல் உள்ளதா?? வராமல் இருக்க என்ன செய்யனும்...

by Logeswari, Apr 12, 2021, 16:06 PM IST

கோடை வந்தாலே சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் பாதிப்புக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. பெண்கள் 40% பேர் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த சிறுநீர்பாதை நோய்த்தொற்றை அனுபவிக்கிறார்கள். பெண்களை காட்டிலும் ஆண்கள் சிலர் மட்டுமே இந்த பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். ஆனால் இதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும் பொதுவாக சொல்லப்படும் காரணங்கள் சிலவற்றை பார்க்கலாம். உடலில் யுடிஐ பாக்டீரியாக்களை உண்டாக்கும் கிருமிகளை வெளியேற்ற உடல் செயல்படும் போது நீரிழப்பு காரணமாக போதுமான தண்ணீர் உடலில் இல்லாத நிலையில் இவை உடலிலேயே தங்கிவிடுகிறது.

இது யுடிஐக்கான வாய்ப்பை அதிகரிக்கும். பெண் குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தாலும் வெளி இடங்களில் இருக்கும் போது இதை அடக்கி வைக்கவே முயற்சிப்பார்கள். இதனாலும் இந்த தொற்று நேரிடுகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றூம் வேலைக்கு செல்லும் பெண்கள். பழச்சாறுகள், எலுமிச்சை கலந்த நீர் இவை எல்லாமே உங்கள் உடலில் நீரிழப்பு உண்டாக்காமல் தடுக்கும். ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பிறகும் 2 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

வெளியில் செல்லும் போதும் தண்ணீர் குடிப்பதை மறந்துவிட வேண்டாம். நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 டம்ளர் என்பதை கணக்கில் வையுங்கள். இதில் பழச்சாறுகளும் அடங்கும்.சிறுநீர் கழிக்கும் உணர்வு வரும்போதே சிறுநீரை வெளியேற்றிவிட வேண்டும். அதை அடக்கி வைப்பதும், பிறகு வீட்டுக்கு வந்ததும் அவசரமாக விரைந்து கழிப்பறை சென்று வெளியேற்றுவதும் பாக்டீரியாவை உள்ளேயே தேக்கிவிட செய்யும். இதை தவிர்க்க உணவு முறையிலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

You'r reading கோடை காலம் என்பதால் சிறுநீர் பாதையில் எரிச்சல் உள்ளதா?? வராமல் இருக்க என்ன செய்யனும்... Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை