இணை அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள்
portfolios allocated to minister of state details
மோடி அமைச்சரவையில் இணை அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் துறைகள் ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றார். மேலும், 24 கேபினட் அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்பு இணையமைச்சர்கள் 9 பேரும், இணையமைச்சர்கள் 24 பேரும் பதவியேற்றனர். பிரதமரை சேர்க்காமல் மொத்தம் 57 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
இணை அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் வருமாறு:
பக்கன்சிங் குலாஸ்தே - ஸ்டீல் துறை
அஸ்வினிகுமார் சவுபே - சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்.
அர்ஜூன்ராம் மேவால் - நாடாளுமன்ற விவகாரம், கனரக தொழில்.
வி.கே.சிங் - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை.
கிருஷ்ணன்பால் - சமூகநீதி மற்றும் உரிமையளிப்பு.
தன்வீர் தவ்சாகேப் தவாரோ- நுகர்வோர், உணவு, பொது விநியோகம்.
கிஷான் ரெட்டி - உள்துறை,
புருஷோத்தம் ரூபாலா- விவசாயம், விவசாயிகள் நலன்
ராமதாஸ் அதவாலே - சமூகநீதி மற்றும் உரிமையளிப்பு
சாத்வி நிரஞ்சன் ஜோதி - ஊரக வளர்ச்சித் துறை.
பாபுல் சுப்ரியோ - சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவமாறுபாடு.
சஞ்சீவ்குமார் - கால்நடைபராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம்.
டோத்ரே சஞ்சய்சாம்ராவ் - மனிதவள மேம்பாடு, தகவல்ஒலிபரப்பு, ஐ.டி,
அனுராக்சிங் தாக்குர்- நிதி மற்றும் வர்த்தகத் துறை
அங்கடி சுரேஷ் - ரயில்வே துறை
நித்யானந்த் ராய்- உள்துறை
ரத்தன்லால் கட்டாரியா - நீர்மேலாண்மை, சமூகநீதி
முரளீதரன்- வெளியுறவு, நாடாளுமன்றம்
ரேணுகாசிங் - பழங்குடியினர் நலன்
சோம்பிரகாஸ்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை
ராமேஸ்வர் தெலி- உணவு பதனிடும் துறை
பிரதாப்சந்திர சாரங்கி - சிறு,குறு நடுத்த தொழில்கள், கால்நடை
கைலாஷ்சவுத்ரி - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன்
தேபாஸ்ரீ சவுத்ரி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்
இவ்வாறு இணை அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
You'r reading இணை அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் Originally posted on The Subeditor Tamil
More Politics News