ருசியான ஆம்லெட் குருமா ரெசிபி! (வீடியோ)

ஹலோ வியூவர்ஸ் இன்னைக்கு நாம அனைவருக்கும் பிடித்த முட்டையில் ஒரு சூப்பர் ரெசிபி பார்க்கப் போறோம்..

ம்லெட் குருமா செய்வதற்கு தேவையான பொருட்கள்:

கரம் மசால              - ஒரு ஸ்பூன்

கருவேப்பிலை         - சிறிதளவு

நறுக்கிய தக்காளி   - 50 கிராம்

நறுக்கிய வெங்காயம் - 50 கிராம்

தேங்காய்த் துண்டுகள் - 40 கிராம்

மல்லி தூள்                     - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள்              - ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு                              - சிறிதளவு

கொத்துமல்லி               - சிறிதளவு

சோம்பு, லவங்கம், ஏலக்காய்,

பட்டை, பிரிஞ்சி இலை      - தேவைக்கேற்ப

மஞ்சள் தூள்                        - ஒரு டீஸ்பூன்

முட்டை                                 -  3

நறுக்கிய பச்சை மிளகாய்  - சிறிதளவு

பொடிதாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட்

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஏலக்காய், சோம்பு, பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

பச்சை வாடை போன பின்னர் தேங்காய் துண்டுகளை சேர்த்து, அத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவை சேர்த்து நன்றாக கிளறி வதக்கவும்.

இந்தக் கலவையை தனியாக ஒரு தட்டில் ஆறவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர், ஒரு பௌலில் 3 முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், சிறிது உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

பிறகு, மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து தயாராக உள்ள முட்டை கலவையை அதில் ஊற்றி ஆம்லெட் செய்யவும். இந்த சமைத்த ஆம்லெட்டை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பின்னர் மற்றொரு கடாயில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை போட்டு தாளித்து அத்துடன் அரைத்து வைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

இறுதியாக ஆம்லெட் துண்டுகளை குருமாவுடன் சேர்த்து கிளறினால் ருசியான ஆம்லெட் குருமா ரெடி..!

இந்த ரெசிபியின் செய்முறையை பார்க்கணுமா..? கீழே இருக்கும் வீடியோவை கிளிக் செய்யுங்கள்..

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email