முக பொலிவுக்கு இயற்கை வழிமுறைகள்

Easy home remedies for stunning skin

by SAM ASIR, Aug 9, 2019, 16:07 PM IST

திரும்பிய இடமெல்லாம் அழகு நிலையங்கள்! அங்கு பல்வேறு அழகு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எல்லா இடங்களிலும் அழகுக்கான பல்வேறு பூச்சுகள் பற்றிய விளம்பரங்கள்! இவை எல்லாம் வேதிப்பொருள்களால் ஆனவை. இயற்கையான பொருள்களை கொண்டு முக அழகை பாதுகாப்பதற்கு, மேம்படுத்துவதற்கு முடியாதா? கண்டிப்பாக முடியும். எளிதாக கிடைக்கும் பொருள்களை கொண்டு முக அழகை பாதுகாக்கும் வழிமுறைகள் இதோ...


தக்காளி:
தக்காளி பழத்துக்கு சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கும் பண்பு உண்டு. இது சருமம் பளபளப்பு மற்றும் முதுமையடைவதை தக்காளி பழம் தடுக்கிறது. சருமத்தின் உலர்ந்த செல்களை அகற்றும் இயல்பு தக்காளிக்கு உண்டு. யோகர்ட் என்னும் சுவையூட்ட தயிர் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும்.


இரண்டு தேக்கரண்டி அளவு தக்காளி சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு யோகர்ட் மற்றும் ஒரு தேக்கரண்டி அளவு ஓட்ஸ் கஞ்சி சேர்த்து, முகத்தில் பூசவும். இருபது நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவலாம். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.


எலுமிச்சை மற்றும் தேன்:
எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து உள்ளது. சருமத்தை சுத்தப்படுத்தும், ஒளிரச்செய்யும் பண்பும் இதற்கு உண்டு. ஒரு மேசைக்கரண்டி பாலுடன் ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேனை கலந்து நன்கு கலக்கி முகத்தில் பூசவும். 20 நிமிட நேரம் கழித்து நீரால் கழுவவும். ஒருநாள் விட்டு ஒரு நாள் இரவு இப்படிச் செய்து வந்தால் முகம் பொலிவான தோற்றம் பெறும்.


கடலை மாவு யோகர்ட்:
இரண்டு மேசைக்கரண்டி கடலை மாவுடன் இரண்டு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் ஒரு தேக்கரண்டி பன்னீர் சேர்க்கவும். இதை நன்கு கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் காத்திருக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவவும். வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் உடனடி பலன் கிடைக்கும்.


உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கு சாற்றில் வைட்டமின் சி சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் உள்ளன. சருமத்திலுள்ள இறந்த செல்களை அகற்றும் பண்பு இதற்கு உண்டு. சருமத்தை சுத்திகரிக்கும் இயல்பு கொண்டது. உருளைக்கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றைக் கொண்டு முகத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடம் வரை காத்திருக்கவும். உருளைக்கிழங்கை சீவி, பிழிந்து சாறெடுத்து பஞ்சைக்கொண்டு முகத்தில் பூசலாம். வாரத்திற்கு மூன்று முறை இதைச் செய்து வந்தால் நல்ல பலன் தெரியும்.


அரிசி மாவு:
அரை கிண்ணம் அரிசி மாவு எடுத்து 3 முதல் 4 மேசைக்கரண்டி பாலுடன் கலந்திடவும். அதை முகத்தில் பூசி அரைமணி நேரம் காத்திருக்கவும். அரிசி மாவுக்கு சருமத்தை மென்மையாக்கும், பிரகாசமாக்கும், ஆரோக்கியமாக்கும் பண்பு உண்டு. வாரம் இருமுறை செய்து வர முகத்தின் தோற்றம் மேம்படும்.

முகப்பருவை முற்றிலும் போக்க எளிய வழிகள்

You'r reading முக பொலிவுக்கு இயற்கை வழிமுறைகள் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை