40 வயதிலும் சிம்ரன் போல ஸ்லிம்மாக இருக்கனுமா??அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க..

by Logeswari, Sep 8, 2020, 17:27 PM IST

வயது எற எற உடலில் அதிக மாற்றங்களும் ஏற்படும்.அதுவும் ஒரு பெண் அல்லது ஆண் மகன் தங்களது 40 வயதினை கடக்கும் பொழுது முகச் சுருக்கம்,உடலில் வலிமை குறையுதல், போன்ற மாற்றங்களை சந்திக்க நேரிடும்..அடுத்து நீரிழிவு நோய்,இரத்த கொதிப்பு போன்ற நோய்கள் நம் உடலில் நுழைவதற்கு தயாராகும்..ஆரோக்கிய உணவை உண்டால் மட்டுமே இதனை விரட்டி அடிக்க முடியும்..நாம் 18 வயதில் எப்படி ஃபிட்டாக இருந்தோமோ அதே போல் இளமை குறையாமல் இருக்க சில குறிப்புகளை காணலாம்..

பெண்கள் 40 வயதில் சாப்பிட வேண்டிய உணவுகள்:-

40 வயதை பெறும் பொழுது ஆண்களை விட பெண்கள் அவர்களின் உடலில் அதிக மாற்றங்களை சந்திப்பார்கள்.இந்நிலையில் அவர்கள் சாப்பிட வேண்டிய உணவு முறையை பார்க்கலாம்.தசைகள் வலிமை பெற அதிக நார்சத்து உள்ள காய்கறிகள்,பழங்கள் ஆகியவை சாப்பிட வேண்டும்.அதிக தானிய வகைகள் உண்டால்.சர்க்கரை நோய்,இரத்த பாதிப்பு,புற்றுநோய் ஆகிய ஆபத்தில் இருந்து காக்க உதவும்.தானியங்கள் வகையான முழு கோதுமை ரொட்டி,பழுப்பு அரிசி மற்றும் ஓட்ஸ் போன்ற உணவுகளை தினசரி உண்டு வந்தால் நோய்கள் இல்லா வாழ்க்கையை வாழலாம்.இது போல் நார்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும்..

பெண்கள் சாப்பிட கூடாதவை:-

40 வயதிற்கு மேல் தாண்டினால் வெள்ளை நிறத்தில் உள்ள உப்பு மற்றும் சர்க்கரையை அறவே நீக்க வேண்டும்.உணவில் அதிக உப்பை சேர்ப்பதால் சிறுநீரக பிரச்சனை,இரத்த கொதிப்பின் அளவு அதிகப்படுத்தி நெஞ்சு வலியை தூண்டும்.அதிக இனிப்பை மேற்கொண்டால் குளுக்கோஸ் அளவை தூண்டி சர்க்கரை நோய் உண்டாகும்.

ஆதலால் இதுபோன்ற குறிப்புகளை கடைப்பிடித்து வாழ்வில் இளமை குறையாமல் நிம்மதியாக வாழுங்கள்...


More Health News

அதிகம் படித்தவை