ஜீரண உறுப்புகளுக்கேற்ற மயூராசனம்

by Vijayarevathy N, Sep 28, 2018, 10:09 AM IST

இக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுவது  ஜீரணமின்மையால்.

உண்ட உணவு செரிக்காமல் மனிதர்கள் படும்பாடு மிக கொடுமையானது. இவ்வாசனத்தின் மூலம் உங்கள் ஜீரணமண்டலம் நன்கு செயல்படுகிறது.

செய்முறை: மயூர் ஆசனம் என்றால் மயில் ஆசனம் எனப் பெயர், முழங்கால் மண்டியிட்டு குதிகால் மேல் உட்காரவும். முன் கைகளைச் சேர்ததுத் தரையில் உள்ளங்கைகளை ஊன்றவும். வயிற்றை இறுக்கி மூச்சை உள் வைத்துத் தொப்புளை முழங்கை மேல் வைத்து கால்களை மெதுவாகப் பின் நீட்டி முன்சாய்த்து சித்திர நிலைக்கு வரவும்.

ஆரம்பத்தில் முகத்திற்குக் கீழ் தலையணை கண்டிப்பாக வைக்க வேண்டும். ஒரு முறைக்கு 10 முதல் 15 வினாடி வரை 5 முறை செய்யலாம்.

பலன்கள்: வாத பித்த கபங்களை சமமாய்க் காக்கும். விதானம் இரைப்பை, ஈரல், கணையம், சிறுகுடல் இவைகள் கசக்கப்பட்டு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும். ஜீரண உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும். நீரிழிவு நோய்க்கு முக்கிய ஆசனம் இது.

You'r reading ஜீரண உறுப்புகளுக்கேற்ற மயூராசனம் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை