யோகாசனங்கள்- முகப் பொலிவுக்கு ஆஞ்சநேய ஆசனம்

முகப் பொலிவுக்கு ஆஞ்சநேய ஆசனம்

by Vijayarevathy N, Oct 8, 2018, 10:14 AM IST

கணினியில் தொடர்ந்து வேலை செய்யும் ஐடி ஊழியர்களின் முகம் கலையிழந்து காணப்படும். எவ்வளவு பணம் செலவு செய்தாலும் முகப்பொலிவை அடைவது என்பது கடினம்தான். கவலை வேண்டாம் இந்த யோகாசனம் தேகம் மற்றும் முகம் பொலிவடைய செய்கிறது.

Anjaneyasana

செய்யும் முறை:

முதலில் 2 கால்களையும் நீட்டி உட்கார்ந்துகொள்ள வேண்டும். பின்னர் கால்களின் பாதங்களை முன்னும், பின்னுமாக அசைத்து தளர்த்திக் கொள்வது முக்கியம். இடது முன்னங்காலை தரையில் ஊன்றி குதிங்காலை மேல் நோக்கி தூக்கிய நிலையில் வைக்க வேண்டும். பின்பு குதிங்கால் மீது படத்தில் உள்ளது போன்று உடலின் பின்பகுதியை வைத்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

இப்போது வலது காலை மடக்கி வலது கால் பாதமானது இடது தொடை மீது வயிற்றுடன் ஒட்டிய நிலையில் இருக்குமாறு வைக்க வேண்டும். 2 கைகயையும் மார்புக்கு நேராக கும்பிட்ட நிலையில் வைக்க வேண்டும். இது தான் ஆஞ்சநேய ஆசனத்தின் அமைப்பாகும். இவ்வாறு 10 முதல் 20 வினாடிகள் வரை உட்கார்ந்து விட்டு பின்னர் படிப்படியாக பழைய நிலைக்கு வர வேண்டும்.

ஆசனப்பயிற்சியின் போது சுவாசம் சாதாரண நிலையில் இருப்பதுடன் செய்து முடித்த பின்பு கால்களை மாற்றி இதே முறையில் வலது காலை ஊன்றி ஆஞ்சநேய ஆசனத்தை செய்யலாம்.

பலன்கள்:

முகம் பொலிவு பெறவும், தொடை தசை இறுக்கம் குறையவும், தட்டையான பாதத்தை சரி செய்யவும், மூட்டு வலியை குணமாக்கவும், கால்களின் நரம்பு சுருண்டு இருந்தால் சரி செய்யவும் ஆஞ்சநேய ஆசனம் பயன் தருகிறது.

மேலும் பல யோகாசனங்களைப் பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

You'r reading யோகாசனங்கள்- முகப் பொலிவுக்கு ஆஞ்சநேய ஆசனம் Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை