காதலில் திளைக்கும் தாரா பொண்ணு..!

by Rahini A, Feb 16, 2018, 10:46 AM IST

தமிழ்த்திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் காதலில் காதலைக் கொண்டாடிவருகிறார். சமீபத்தில் காதலர் தினத்தையொட்டி இந்த ஜோடி வெளியிட்டப் புகைப்படம் சைலண்ட் ஆக ஹிட் அடித்து வருகிறது.

காதலர் தினம் அன்று பாலிவுட் திரை நட்சத்திர ஜோடிகளின் புகைப்படங்களே வைரலாகிப் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், நேற்று கோலிவுட் லேடி சூப்பர்ஸ்டார் வெளியிட்டப் புகைப்படம் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

'நானும் ரெளடி தான்' திரைப்படம் மூலம் ஹிட் அடித்த இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் அந்தத் திரைப்படத்தில் கதாநாயகி நயன்தாராவுக்கும் காதல் என செய்திகள் பரவலாகப் பரவி வந்தாலும் காதல் ஜோடிகள் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனால், அவ்வப்போது தாரா பொண்ணு வெளியிடும் புகைப்படங்கள் வைரல் லிஸ்டில் இடம்பெறாமல் இருக்காது. சமீபத்தில் இந்த காதல் ஜோடி வெளிநாட்டில் தங்கள் காதலைக் கொண்டாடியுள்ளனர்.

மேலும், கூடுதலாக ஜோடி டி-சர்ட் அணிந்தும் அசத்தியுள்ளனர். ஆங்கில எழுத்தில் 'வி' விக்கி என்றும் 'என்' நயன்தாரா என்றும் குறிக்கும் எழுத்துகள் பதிந்த டி-சர்ட் அணிந்து உற்சாக ரொமாண்டிக் போஸ் கொடுத்து மாஸ் காட்டியுள்ளனர்.

விக்கி 'லவ்' நயன்..!

You'r reading காதலில் திளைக்கும் தாரா பொண்ணு..! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை