ஒருவிரல் புரட்சி! ரசிகர்கள் கையால் வெளியிடப்பட்ட சர்கார் பாடல்கள்!

by Mari S, Oct 2, 2018, 22:46 PM IST

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் அனைத்து பாடல்களும் நேற்றே லீக்காகிய நிலையில், தற்போது, அதிகாரப்பூர்வமாக அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளன.

விஜய்யின் சர்கார் பாடல்களை அவரது ரசிகர்கள் கையால் வெளியிடும் வகையில், படக்குழுவினர் செய்த ஒரு விரல் புரட்சி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

இன்று மாலை சர்கார் பாடல்கள் விழா தனியார் கல்லூரி ஒன்றில், நிகழ்ச்சி நடந்து வருகிறது. நிகழ்ச்சியில், டிஜிட்டல் தொழில்நுட்பமுறையில், அதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளமான www.sarkar.sunpicturs.in மூலம், விழாவில் கூடியிருந்த அவரது ரசிகர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த மொபைல்போன்களின் மூலம் அனைத்து பாடல்களையும், விஜய் ரசிகர்கள் தங்களது கைகளால் வெளியிட்டனர். இந்த முயற்சி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த இணையதளத்தில் அனைத்துப் பாடல்களும் இருக்கின்றன.

நிகழ்ச்சியில் பேசிய, ராதாரவி, ”இப்போது நமது ஊரில் இருக்கும் சர்கார் சும்மா நடந்துகிட்டு இருக்குது. சன் பிக்சர்ஸ்க்கு எப்போது சர்காரை எடுக்க வேண்டும் என்பது தெரியும். தளபதி நீங்கள் சமுதாயத்துக்கு தேவை. இந்த விழா மாநாடு போல் நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.

கீர்த்தி சுரேஷ், தான் ஒரு தளபதி ரசிகர் என்றார். நிகழ்ச்சியில், பேசிய பாடலாசிரியர் விவேக், சிம்டாங்காரன் பாடலுக்கு ‘கண் சிமிட்டாமல் பார்க்க வைப்பவன்’ என்ற அர்த்தம் என்றார்.

சர்கார் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் ரஜினியை போல விஜய்யும், ஒரு முழு நீள 3டி மோஷன் பிக்சரில் விரைவில் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.

நிகழ்ச்சியில், இன்னும் தளபதி விஜய் பேசுவதற்காக, வெயிட்டிங் பேசியவுடன் அப்டேட் செய்றோம் ரசிகர்களே..

பாடல்களை கேட்டு மகிழுங்கள்!  

சர்கார் பாடல்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்..  

You'r reading ஒருவிரல் புரட்சி! ரசிகர்கள் கையால் வெளியிடப்பட்ட சர்கார் பாடல்கள்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை