திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு

Tirupati Navratri completed

Oct 18, 2018, 13:57 PM IST

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.

Tirupati

திருமலை ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து ஸ்ரீதேவி,பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், கல்ப விருக்‌ஷம், கருட, சிம்ம, அனுமந்த வாகனம் என பல்வேறு வாகனங்களில் காலையும் மாலையும் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று அதிகாலை கோயிலில் இருந்து உற்சவ மூர்த்திகளும் சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராஹ சுவாமி கோயிலுக்கு வந்தனர்.

திருப்பதி மலையப்ப சுவாமி தாயார்களுக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் பால்,தயிர், தேன், இளநீர், உள்ளிட்ட சுகந்த திரவியங்களை கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது.

பின்னர் ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதனை தொடர்ந்து குளத்தை சுற்றி நின்றிருந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

You'r reading திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை