நடிகர் திலகம்.. இளைய திலகம்.. தொடர்ந்து.. ?

by Isaivaani, Jan 10, 2018, 22:28 PM IST

விக்ரம் பிரபு நடித்துள்ள ‘பக்கா’ என்ற புதிய படத்தின் மூலம் அவருக்கு பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் மூலம், அறிமுகமானவர் விக்ரம் பிரபு. சிவாஜியின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு கும்கிக்கு பிறகு, 9 படங்களில் நடித்தார். ஆனால், இதில் ஒரு படம் கூட கூறும் அளவிற்கு ஓடவில்லை.

இந்நிலையில், விக்ரம் பிரபு அடுத்ததாக எஸ்.எஸ்சூர்யா இயக்கத்தில் ‘பக்கா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில், நிக்கி கல்ரானி, பிந்து மாதவி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில், விக்ரம் பிரபுவுக்கு ‘வீரத் திலகம்’ என பட்டம் வழங்கப்பட்டுள்ளது. விக்ரம் பிரபுவின் தாத்தாவான சிவாஜி ‘நடிகர் திலகம்’ என்றும், தந்தை பிரபுவுக்கு ‘இளைய திலகம்’ என்றும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading நடிகர் திலகம்.. இளைய திலகம்.. தொடர்ந்து.. ? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை