அணைகளை பாதுகாக்க தமிழகத்துக்கு ரூ.543 கோடி ஒதுக்கீடு

by Isaivaani, Sep 20, 2018, 08:19 AM IST

நாட்டின் ஏழு மாநிலங்களில் உள்ள 198 அணைகளை பாதுகாக்க ரூ.3466 கோடியும், இதில் தமிழகத்துக்கு ரூ.543 கோடியும் ஒதுக்க மத்திய அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாட்டில் உள்ள முக்கிய அணைகளை பாதுகாத்து பராமரிப்பதற்காக த்திய அரசு உலக வங்கியுடன் கைகோர்த்து திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. குறிப்பாக, தமிழகம், கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 198 அணைகள் இத்திட்டத்தின் கீழ் அடங்கும்.

இதற்காக, ரூ.3466 செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்களுக்கு குழு நேற்று தனது ஒப்புதலை வழங்கியது.

குறிப்பாக, ரூ.2628 கோடியை உலக வங்கியும், ரூ.747 கோடி சம்பந்தப்பட்ட மாநிலங்களும், மீதம் ரூ.91 கோடியும் மத்திய நீர் ஆணையம் அளிக்கும். இதில், தமிழக அணைகள் பாதுகாப்புக்கு ரூ.543 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதைதவிர, அங்கன்வாடி ஊழியர்கள் மாத சம்பளமும் உயர்த்தி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி ஊழியர்கள் மாத சம்பளத்தை ரூ.3000ல் இருந்து ரூ.4500 ஆகவும், சிறிய அங்கன்வாடி மையங்களின் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.2250ல் இருந்து 3500 ஆகவும், அங்கன்வாடி உதவியாளர் சம்பவளம் ரூ.1500ல் இருந்து ரூ.2250 ஆகவும் உயர்த்தப்படுகிறது. மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.250ம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

You'r reading அணைகளை பாதுகாக்க தமிழகத்துக்கு ரூ.543 கோடி ஒதுக்கீடு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை