ஸ்ருதி ஹாசன் வாய்ஸில் வெளியான கடாரம் கொண்டான் பாடல்!
Shruti haasan sung Kadaaram kondan song lyric video released
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தின் டைட்டில் சாங் உழைப்பாளர் தின கொண்டாட்டமாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
”களம் கொண்டான்.. பலம் கொண்டான்.. சுயம் கொண்டான்.. கடாரம் கொண்டான்” என்ற பாடலை நடிகையும் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதி ஹாசன் மற்றும் ராப் இசை கலைஞர் ஷபிர் இணைந்து பாடியுள்ளனர்.
ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் பாடலின் லிரிக் வீடியோவை ராஜ்கமல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
காதலருடனான பிரிவுக்குப் பின்னர் மீண்டும் சினிமா பக்கம் திரும்பியுள்ள ஸ்ருதிஹாசன் செம எனர்ஜெட்டிக்காக இந்த பாடலை பாடியுள்ளார்.
கமலின் இன்னொரு மகள் அக்ஷரா ஹாசன் கடாரம் கொண்டான் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடாரம் என்பது மலேசியாவை குறிப்பதால், இந்த படம் மலேசியாவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
‘’அதனால்தான் அவர் நல்லகண்ணு’’ –தயாராகிறது தோழரின் ஆவணப்படம்!
You'r reading ஸ்ருதி ஹாசன் வாய்ஸில் வெளியான கடாரம் கொண்டான் பாடல்! Originally posted on The Subeditor Tamil
More Cinema News