16 வயதில் பாய்பிரண்டுடன் டேட்டிங் செய்த நடிகை... என்னவொரு தைரியம்...
Rashi Kanna Open Talk About Her Teen Life
தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.
இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருக் கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி படங் களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பரபரப்பான தகவல் வெளியிட்டிருந்தார். சிறுவயதில் அவரது வாழ்க்கை மற்றும் பள்ளி நாட்கள் பற்றி கேட்டபோது, எனக்கு பதினாறு வயதாக இருக்கும் போதே பையன் ஒருவனுடன் டேட்டிங் செய்திருக்கிறேன். ஆனால் அந்த நட்பு காதலாக மாறுவதற்கு முன்பே இருவரும் பிரிந்துவிட்டோம்' என்றார்.
ராஷி கண்ணாவின் டேட்டிங் விஷயம் பற்றி அறிந்த நெட்டிஸன்கள், அந்த வயசிலேயே என்னவொரு தைரியம்... என்று கலாயத்து வருகின்றனர்.
You'r reading 16 வயதில் பாய்பிரண்டுடன் டேட்டிங் செய்த நடிகை... என்னவொரு தைரியம்... Originally posted on The Subeditor Tamil
More Cinema News
READ MORE ABOUT :