வெப் சீரிஸில் நடிக்க தயாராகிறார் வடிவேலு.. இருமடங்கு சம்பளம் பெறுகிறார்..

by Chandru, Dec 20, 2019, 15:47 PM IST

வடிவேலு இதுவரை நடித்த கதாபாத்திரங்கள் எல்லாமே அவர் நடிக்காமல் ஒதுங்கியிருக்கும் நாட்களிலும் மீம்ஸ்களாக இணைய தளத்தை வலம் வந்துக்கொண்டிருக்கிறது. ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்கவிருந்தார் வடிவேலு.

பட தரப்புக்கும் வடிவேலுவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதையடுத்து அப்படத்திலிருந்து விலகினார். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் பட தயாரிப்பாளர் புகார் செய்தார். இதனால் புதியபடங்களில் நடிக்க வடிவேலுக்கு இடையூறு ஏற்பட்டது.

இந்நிலையில் கமலின் 60 வது ஆண்டு திரையுலக நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற வடிவேலு கமல் ஹாசன் நடிக்கும் தலைவன் இருக்கிறான் படத்தில் நடிப்பதை அறிவித்தார். அதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. ஏற்கனவே இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டார் கமல். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஆபரேஷ்ன் செய்துகொண்டதால் ஓய்வில் இருக்கிறார் கமல்.

மேலும் தீவிரமாக அரசியல் பிரசாரங்களில் ஈடுபட உள்ளதுடன், இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்து தர வேண்டி உள்ளது. எனவே வடிவேலு வெப் சீரிஸில் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு படத்தில் நடிப்பதைவிட இருமடங்கு சம்பளம் தரப்படவிருக்கிறதாம். அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. வரும் ஜனவரி மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

You'r reading வெப் சீரிஸில் நடிக்க தயாராகிறார் வடிவேலு.. இருமடங்கு சம்பளம் பெறுகிறார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை