தீ நடிகர் தீப்பெட்டி கணேசன் கதறல்.. அஜீத்திடம் உதவி பெற்றுத் தர லாரன்ஸ் உறுதி..
theepetti ganesan seek help from ajith
ரேணிகுண்டா உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் தீப்பெட்டி கணேசன். கொரோனா ஊரடங்கால் இவர் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமலிருக்கிறார். ஏற்கெனவே அஜீத் நடித்த பில்லா 2 படத்திலும் நடித்திருக்கிறார்.
'கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாததால் வருமானம் இன்றி கஷ்டப்படுகிறேன் குழந்தைகளுக்குப் பள்ளி கட்டணம் கூட கட்ட முடியவில்லை. தல அஜீத் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என உருக்கமாக வீடியோ வெளியிட்டிருந்தார்.
இது நடிகர் ராகவா லாரன்சுக்கு தெரிய வந்தது. இதையடுத்து தீப்பெட்டி கணேசனுக்கு ஆறுதல் கூறிய அவர் கணேசனின் குழந்தைகள் படிப்பு செலவைத் தான் ஏற்பதாகவும் அஜீத்திடம் உதவி பெற்றுத் தர ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார்.
You'r reading தீ நடிகர் தீப்பெட்டி கணேசன் கதறல்.. அஜீத்திடம் உதவி பெற்றுத் தர லாரன்ஸ் உறுதி.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News