காஜல் அகர்வால் இருவித கேக் தயாரித்து பரிமாறினார்.. லாக்டவுன் குறித்து புது நம்பிக்கை..
Kajal Aggarwal reveals new skill during lockdown
நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2ம் பாகத்தில் கமலுடன் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருக்கும் அவர் தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார். உடற்பயிற்சி. வீட்டுவேலைகள், தங்கை குழந்தையுடன் விளையாட்டு, ரசிகர்களுடன் இணையதளத்தில் சாட்டிங் எனப் பொழுதைக் கழித்து வருகிறார்.
தனது திறமையை வெளிப்படுத்தும் விதமாக நேற்று சாக்லெட் கேக், கேரட் கேக் என்று இருவித கேக்குகளை தயார் செய்து வீட்டிலிருந்தவர்களுக்கு அளித்தார். முன்னதாக தான் தயாரித்த அந்த கேக்கை படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அத்துடன் இருவகை கேக் தயாரிப்பதற்குத் தேவையான விவரங்களும் பகிர்ந்தார்.இதுபற்றி அவர் கூறும்போது,ருசியான கேக் வகைகளை வீட்டிலேயே பேக் செய்தேன். சாக்லெட் கேக், கேரட் கேக் இரண்டுமே ஆரோக்கியத்துக்கு நல்லது. கவலைப்படாதீர்கள் இந்த லாக்டவுன் சீக்கிரமே முடிந்துவிடும் என குறிப்பிட்டிருக்கிறார் காஜல்.
You'r reading காஜல் அகர்வால் இருவித கேக் தயாரித்து பரிமாறினார்.. லாக்டவுன் குறித்து புது நம்பிக்கை.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News