நிதி அகர்வால் பேக் செய்த பிரெட் ஜாம்.. புலம்பெயர்ந்தவர்கள் பசியாற்றுகிறார்..
Nidhhi Agerwal arranges meals for stranded migrant workers
நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படம் பூமி. இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் நிதி அகர்வால். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் வெளியிட்டார். தனது வீட்டில் தட்டு நிறைய பிரெட் மற்றும் ஜாம் வைத்துக் கொண்டு அதை அலுமினிய ஃபாயில் பேப்பரில் பார்சல் செய்துக்கொண்டிருந்தார்.
இந்த உணவு வெளியூர்களிலிருந்து வந்து கொரோனா தடையால் பாதிக்கப்பட்டு பசியால் வாடுபவர்களுக்காக வழங்குவதற்கு தயாரிக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
விரைவில் தமிழில் அறிமுகமாகவுள்ள நிதி அகர்வால் தற்போது ஆங்கிலம் வழியாகத் தமிழ் கற்று வருகிறார். பூமி படம் மூலம் தமிழில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் நிதி அகர்வால்.
You'r reading நிதி அகர்வால் பேக் செய்த பிரெட் ஜாம்.. புலம்பெயர்ந்தவர்கள் பசியாற்றுகிறார்.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News