ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிரபல நடிகர் நோட்டீஸ்.. வாசனை தொழில் நுட்பம் திருடிவிட்டார்..

Concept Theft: Actor Babu Ganesh Sent Notice To AR.Rahaman

by Chandru, Jul 18, 2020, 10:54 AM IST

பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் பாபு கணேஷ். நடிப்பு, இசை, இயக்குனர் என பல பொறுப்புகளை இவர் வகித்திருக்கிறார். தேசியப் பறவை, நாகலிங்கம், நானே வருவேன், கடல் புறா ஆகிய படங்களை இயக்கியதுடன் நடித்திருக்கிறார் பாபு கணேஷ். திரைப்படத்தின் மூலம் உலகின் முதல் வாசனை படம் படைத்துப் பரபரப்பு ஏற்படுத்தினர் பாபு கணேஷ். நானே வருவேன் என்ற திகில் படத்தை இயக்கி இவர், தியேட்டரில் அப்படம் வெளியான போது குறிப்பிட்ட காட்சிகளுக்கு வாசனை வெளியாகும் வகையில் தியேட்டரில் கட்டமைப்புகள் ஏற்படுத்தினார். இது உலகிலேயே முதல் வாசனை படம் என்று பாபு கணேஷ் அப்போது தெரிவித்தார். இப்படம் 2012 ம் ஆண்டு திரைக்கு வந்தது. மேலும் நடிகை என்ற படத்திற்குப் பட துறையில் உள்ள இயக்கம். நடிப்பு. ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட மொத்தம் 14 பொறுப்புகளை அவரே ஏற்றுப் பணியாற்றி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வாசனை தொழில் நுட்பத்தைத் திருடிவிட்டதாகப் புகார் தெரிவித்திருக்கிறார் பாபுகணேஷ். இதுபற்றி பாபுகணேஷ் கூறியதாவது: ஏ.ஆர்.ரஹ்மான் தானே இசை அமைத்து இயக்கும் படமான லீ மஸ்க் (Le musk) படத்தில் நானே வருவேன் படத்தில் நான் அறிமுகப்படுத்திய காட்சிகளின் போது வாசனை வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.லீ மஸ்க் திரைப்படத்தில் தான் வாசனை உக்தியை உலகிலேயே முதன்முறையாகக் கையாள்வதாகத் தெரிவித்திருக்கிறார். இது எனக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை ஏற்கனவே நானே வருவேன் படம் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளேன், அது உலக அதிசயமாக பதிவாகி இருக்கிறது.

மேலும் ஆசியன் புக், இந்தியன் புக், யுனிவர்சல் புக் ஆகிய சாதனைகளையும் படைத்துள்ளது.நான் அறிமுகப்படுத்திய தொழில்நுட்ப கான்செப்ட்டை வைத்து ஏ.ஆர் ரஹ்மான் ஆங்கிலப் படத்தை இயக்கி இருக்கிறார். எனது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது பெருமை என்றாலும் ஆனால் அதனை உலகத்திலேயே முதன்முறையாகத் தான் தான் செய்வதாகக் கூறுவது எனது உழைப்பை திருடியதாகவே அர்த்தம்.

ரஹ்மான் உழைப்பை யாரேனும் பயன்படுத்தினால் தந்து டீமை வைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறார், அதற்கான பணமும் வசூலிக்கிறார். ஆனால், எனது தொழில்நுட்பத்தை அவர் எப்படி எனது அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியும்.
தற்போது மூன்று மொழிகளில் நான் தயாரித்து வரும் காட்டுப்புறா படத்தில் மீண்டும் வாசனை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறேன். இதை நம்பித் தான் எனக்கு பைனான்சியர்கள் பணம் கொடுத்துள்ளார்கள். இத்தகைய ஒரு சூழலில், ரஹ்மான் என்னிடம் பேசியிருக்கலாம். எனது கான்செப்ட் (தொழில்நுட்பம்) திருட்டு குறித்து, ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்.

இவ்வாறு பாபுகணேஷ் கூறினார்.

You'r reading ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிரபல நடிகர் நோட்டீஸ்.. வாசனை தொழில் நுட்பம் திருடிவிட்டார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை