செல்வராகவன் இயக்கிய படம் தியேட்டரில் ரிலீஸ்..

by Chandru, Feb 6, 2021, 20:01 PM IST

இயக்குனர் செல்வராகவன் கடைசியாக சூர்யா நடித்த என் ஜி கே படத்தை இயக்கினார். சாய் பல்லவி. ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் இதில் நடித்திருந்தனர். என் ஜி கே படத்துக்கு முன்பாக நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கி இருந்தார் செல்வ ராகவன். இதில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா, நந்திதா ஆகியோர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி ஹிட்டானது.

இப்படத்துக்காக ரசிகர்களும் கடந்த 5 வருடமாக காத்திருக்கின்றனர். நீண்ட தாமதத்துக்குப் பிறகு தற்போது இப்படம் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. மார்ச் முதல் வாரம் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில் சாணி காகிதம் என்ற படத்தில் செல்வராகவன் நடித்திருக்கிறார். அவருடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் படத்தை இயக்க உள்ளார் செல்வராகவன். அதற்கான ஸ்கிரிப்ட் ரெடி செய்து வருகிறார்.

You'r reading செல்வராகவன் இயக்கிய படம் தியேட்டரில் ரிலீஸ்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை