பிக் பாஸ் கண்ணுகுட்டிக்கு தேடி வரும் திரைப்பட வாய்ப்புகள்.. வானத்தில் பறக்கும் அனிதா..

by Logeswari, Feb 10, 2021, 12:16 PM IST

பிக் பாஸ் நான்காவது சீசனில் ஒரு சில போட்டியாளர்கள் இல்லையென்றால் சுவாரசியம் என்பது ஒரு துளி கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்த பட்டியலில் இடம்பிடித்தவர் தான் நமது கண்ணுகுட்டி அனிதா. எங்கே தப்பு நடந்தாலும் எதிர்த்து பேச கூடிய திறமை அனிதாவுக்கு அதிகமாகவே உண்டு. இவர் கோவத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பது தெரியாமல் சிலரது மனதை புண்படுத்தி விடுவார். ஆனாலும் அவரின் நிலையை அறிந்த சிலர் இப்பொழுதும் அவருக்கு பக்கபலமாய் இருந்து வருகின்றனர். பிக் பாஸ் போட்டியை விட்டு வெளியேறும் பொழுது பல சர்ச்சைக்குரிய விமர்சனங்களுக்கு தள்ளப்பட்டார்.

அந்த காயம் அறுவதற்குள்ளே அவரது தந்தை உடல் நலக்குறைவால் உயிர் இழந்து விட்டார். அவர் தந்தையின் இழப்பு அவரை நிலைகுலையசெய்தது. இருப்பினும் அவரை பாசிட்டிவாக வைத்து கொண்டு பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். தற்பொழுது அவரை நோக்கி பல திரைப்பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அதுவும் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் திரைப்படமாய் அவரை தேடி அலை மோதுகிறது. ஒரு படத்தில் செய்தி வாசிப்பாளராகவும், இன்னொரு படத்தில் தோழி கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்ற செய்தி தீயாய் பரவி வருகின்றது. தந்தையின் இழப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார்.

You'r reading பிக் பாஸ் கண்ணுகுட்டிக்கு தேடி வரும் திரைப்பட வாய்ப்புகள்.. வானத்தில் பறக்கும் அனிதா.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை