முதன்முதலாக கார் வாங்க போறீங்களா? சில டிப்ஸ்!

Going to buy your first car Few useful tips

by SAM ASIR, Jul 16, 2019, 23:25 PM IST

கார் வாங்குவது வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம்! இப்போதுதான் முதலாவது காரை வாங்க இருக்கிறீர்கள் என்றால் சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

பயன்பாடு

எந்தப் பயன்பாட்டுக்கென்று கார் வாங்குகிறோம் என்பது முக்கியம். அலுவலகத்திற்கு, ஷாப்பிங் செல்வதற்கு போன்றவற்றிற்காக என்றால் சிறிய ரக கார்கள் போதும். குழந்தைகள் இருந்தால் சற்று பெரிய ரக கார் தேவை.

புத்தம்புது கார்: நேர்மறை பலன்கள்

புதிய காரை வாங்கினால் பராமரிக்கும் செலவு குறைவு. வண்டி, வாரண்டியில் இருக்கும். பழுது நீக்க அதிக செலவு பிடிக்காது. நீண்டதூரம் பயணிக்கும்போது பழுது ஏற்பட்டால் கார் நிறுவனத்தின் சேவை கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய கார் என்பதால் எரிபொருள் குறைவாகவே செலவாகும்.

புதிய கார்: எதிர்மறை பலன்கள்

புதிய காருக்காக வாங்கும் கடன் அல்லது கையிலிருந்து போடுவது பெருந்தொகையாக அமையும். காப்பீடும் அதிகம். காரை ஷோரூமிலிருந்து வெளியே எடுத்ததும் அதன் மதிப்பு 25 விழுக்காடு குறைந்து விடும்.

பழைய கார்: நேர்மறை பலன்கள்

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவது, பணத்திற்கு உரிய மதிப்பு கிடைக்கும் செலவாகும். அதிகம் கடன் வாங்க வேண்டியது இருக்காது. அதிக தூரம் ஓடாத கார் என்றால் எஞ்ஜின் புதிதாகவே இருக்கும்.

பழைய கார்: எதிர்மறை பலன்கள்

நாம் விரும்பும் மாடலில் பழைய கார் கிடைப்பது கடினம். பழைய காருக்கு பராமரிப்பு செலவு அதிகமாகும். எரிபொருளும் கூடுதலாக செலவாகும். பயன்படுத்தப்பட்ட கார் என்பதால் அடிக்கடி பழுதாக வாய்ப்பு உண்டு.

பொருளாதார நோக்கு

கார் வாங்குவதற்கு போதிய பொருளாதார கணக்கீடுகளை செய்து கொள்ளுங்கள். வருமானம், குடும்ப செலவுகள், செலுத்த வேண்டிய கடன் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு என்ன விலையில் கார் வாங்கலாம் என தீர்மானியுங்கள். தீர்மானித்த தொகைக்கு மேலாய் கார் வாங்க வேண்டாம். காருக்கான பெட்ரோல் / டீசலுக்கு பணம் தேவைப்படும். மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் டயர் மாற்றும் செலவு உண்டு.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்கலம் ( பேட்டரி) மாற்றுவதற்கு பணம் தேவை. கார் பதிவு, ஓட்டுநர் உரிமம், வாகன பழுது, சுங்க கட்டணம் ஆகிய செலவுகள் இருக்கும்.
தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொண்டு, பகுதி நேரம் ஏதாவது வேலை, தொழில் செய்து பணம் ஈட்டுவது உதவியாக இருக்கும்.

You'r reading முதன்முதலாக கார் வாங்க போறீங்களா? சில டிப்ஸ்! Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை