எபோலா வைரஸ் மீண்டும் ஆப்பிரிக்கா நாடுகளை தாக்கியது! – 17 பேர் பலி

எபோலா வைரஸ் மீண்டும் ஆப்பிரிக்கா நாடுகளை தாக்கியது! – 17 பேர் பலி

by Rekha, May 9, 2018, 16:10 PM IST

எபோலா வைரஸ் விலங்குகளில் இருந்து தான் மனிதர்களுக்கு பரவுகிறது. இந்நோய் தென் ஆப்பிரிக்க நாடுகளில் 1976ஆம் ஆண்டு முதன் முதலாக  கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது, இந்த வைரஸ் தாக்கி 280 பேர் உயிரிழந்தனர். 

தற்போது, தென் ஆப்பிரிக்காவின் வடமேற்கு நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் தாக்கியதில் 17 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் இறந்த 21 பேரின் உடலை பரிசோதனை செய்து பார்த்ததில் எபோலா வைரஸ் பரவி இருக்கிறது என உலக சுகாதார நிலையம் தெரிவித்தது. 

ஆப்பிரிக்க நாடுகளில் மீண்டும் எபோலா நோய் பரவ தொடங்கி உள்ளதால் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. எபோலா வைரஸ் நோய் வந்தால் 90 சதவீதம் மரணத்தில் தான் முடியும். எபோலா கிருமித் தொற்று தாக்கினால் தொடர் காய்ச்சல், உடல் சோர்வு, கரகரப்பான தொண்டை வலி, தசை வலிகள், தலைவலி இந்நோயின் அறிகுறிகள்.

இது மட்டும் அல்லாமல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடு குறைந்து போனதைத் தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு சிலருக்கு ரத்தக்கசிவு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எபோலா வைரஸ் தாக்கினால் கண்டுபிடிக்க 2 முதல் 21 நாட்கள் வரை ஆகுலாம். இதற்கு தடுப்பு மருந்து ஒன்றுமே இல்லை தீவிர சிகிச்சை மூலம் நோயாளியை சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ வைக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading எபோலா வைரஸ் மீண்டும் ஆப்பிரிக்கா நாடுகளை தாக்கியது! – 17 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை