சத்தான சப்போட்டா மில்க் ஷேக் ரெசிபி

Yummy Chikoo Fruit Milkshake Recipe

by Isaivaani, Apr 10, 2019, 23:09 PM IST

உடலுக்கு மிகவும் சத்து தரும் சப்போட்டா மில்க் ஷேக் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

சப்போட்டா - அரை கிலோ

பால் - ஒரு தம்ளர்

பேரிச்சம்பழம் - 7

செய்முறை:

முதலில், சப்போட்டாவை நன்றாக கழுவி தோல் மற்றும் கொட்டைகளை நீக்கவும்.

இதற்கிடையே, பேரிச்சம்பழத்தை கொஞ்சம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

பிறகு, மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை அதன் தண்ணீருடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அத்துடன், சப்போட்டாவை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு, காய்ச்சி பிரிட்ஜில் வைத்த பாலை சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ளவும்.

இதனை ஒரு கண்ணாடி தம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

அவ்ளோதாங்க.. சுவையான சப்போட்டா மில்க்ஷேக் ரெடி..!

You'r reading சத்தான சப்போட்டா மில்க் ஷேக் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை