சுவையான தக்காளி இனிப்பு பச்சடி ரெசிபி

சுவையான தக்காளி இனிப்பு பச்சடி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

நெய் - 4 டேபிள் ஸ்பூன்

முந்திரி பருப்பு - 10

உலர் திராட்சை - கால் கப்

பேரிச்சைப் பழம் - கால் கப்

சர்க்கரை - ஒன்றரை கப்

தக்காளி - 8

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்விட்டு சூடானதும் முந்திரிப் பருப்பு, திராட்சை, பேரிச்சைப் பழத் துண்டுகள் சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் சர்க்கரை, அரை கப் தண்ணீர் சேர்த்து கரையவிடவும்.
அத்துடன். பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து சுமார் அரை மணி நேரம் வேகவிடவும். இடையிடையே, மூன்று டேபிள் ஸ்பூன் நெய்விட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்.

தக்காளி நன்றாக குழைந்து ஹல்வா பதத்திற்கு வந்ததும், வறுத்து வைத்த முந்திரி, திராட்சை கலவையை சேர்த்து கிளறி இறக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான தக்காளி இனிப்பு பச்சடி ரெடி..!

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
Tasty-Cabbage-Manchurian-balls-Recipe
ட்ரை பண்ணுங்க.. முட்டைகோஸ் மஞ்சூரியன் உருண்டை ரெசிபி
Tasty-Sweet-Corn-Capsicum-Masala-Recipe
அசத்தலான சுவையில் ஸ்வீட் கார்ன் குடைமிளகாய் மசாலா ரெசிபி
Yummy-Vannila-Cup-Cake-Recipe
ஈசியா செய்யலாம் வெண்ணிலா கப் கேக் ரெசிபி
Karnataka-Special-Bonda-Soup-Recipe
கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் ரெசிபி
Tasty-Vadagam-Recipe
கமகமக்கும் தாளிப்பு வடகம் செய்யலாமா ?
Flavoured-Biriyani-Masala-Recipe
ரகசியமா வெச்சிக்கோங்க.. சுவையை அள்ளிக்கொடுக்கும் பிரியாணி மசாலா ரெசிபி
Super-Dish-Dal-Masala-Gravy-Recipe
சூப்பர் டிஷ் பருப்பு மசாலா கிரேவி ரெசிபி
Tasty-Sweet-Corn-Gravy-Recipe
அட்டகாசமான சுவையில் ஸ்வீட் கார்ன் கிரேவி ரெசிபி
Spicy-Baby-Corn-Masala-Recipe
ஸ்பைசி பேபி கார்ன் மசாலா ரெசிபி
Tasty-Lunch-Carrot-Rice-Recipe
அட்டகாசமான மதிய உணவு கேரட் சாதம் ரெசிபி
Tag Clouds