நீதித்துறை ஊழியர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவுரை

Jul 29, 2018, 08:30 AM IST
மின்னணு யுகத்துக்கு ஏற்ப நீதித்துறை ஊழியர்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மூன்று நாள் பொன்விழா மாநாட்டின் நிறைவு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் நடந்தது.
 
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதியுமான சஞ்சய்கிஷன் கவுல், சங்க முழக்கம் என்ற மாநாட்டு விழா மலரை வெளியிட்டார்.
 
விழாவில் பேசிய  உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், “நீதித்துறை என்பது உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் மட்டும் அடங்கியது இல்லை, அனைத்து நீதித்துறைகளையும் உள்ளடக்கியது” என தெரிவித்தார்.
 
“நீதித்துறை பணியாளர்கள் பணியாற்றவில்லை என்றால் நீதிபதிகளால் பணியாற்ற முடியாது. மின்னனு யுகத்துக்கு ஏற்ப திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை பணி நியமனம் செய்வது, காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் வலியுறுத்தப்படும்" என அவர் உறுதியளித்தார்.

You'r reading நீதித்துறை ஊழியர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவுரை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை