திருப்பதி பிரம்மோற்சவ விழா கோலாகலம்...

Sep 14, 2018, 13:28 PM IST

திருமலை கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, மலையப்ப சுவாமி சிறிய சேஷ வாகனத்தில் வீதி உலா வந்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இன்றைய தினம் சிறப்பு அலங்காரத்தில் சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் மாட வீதிகளில் பெருமாள் வீதி உலா வந்தார்.

மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள், கோவிந்த கோவிந்தா என கோஷம் எழுப்பி பெருமாளை வழிபட்டனர். சேஷ வாகனத்தின் முன்னால், ஆண்கள், பெண்கள், பஜனைபாடிச் சென்றனர். சில பெண் பக்தர்கள் கோலாட்டம், பரதநாட்டியம் ஆடியபடி வீதி உலா வந்தனர்.

முக்கிய நிகழ்வான கருட சேவை 17ஆம் தேதியும்,18ஆம் தேதி தங்க ரத ஊர்வலம், 20ஆம் தேதி தேரோட்டம், 21ஆம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற உள்ளன. விழாவை பார்க்க 31 இடங்களில் எல்.இ.டி. தொலைக் காட்சிகள் அமைக்கப்படுள்ளன. மேலும், 11 முதலுதவி மையங்கள், 12 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழா நடைபெறும் 9 நாட்களும் அலிபிரி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். கருட சேவையின் போது, கூடுதலாக 1,500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 650 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வரும் 21ஆம் தேதி வரை வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ஆர்ஜித சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வழங்குவதற்காக 7 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

You'r reading திருப்பதி பிரம்மோற்சவ விழா கோலாகலம்... Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை