5 டிரில்லியன் டாலர்- நரேந்திர மோடி நம்பிக்கை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றிய தகவல் - நரேந்திர மோடி

by Rajkumar, Sep 21, 2018, 15:08 PM IST

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 5 டிரில்லியன் டாலரை எட்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லியில் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி பேசிய மோடி, பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது என்றும் உற்பத்தி மற்றும் வேளாண்துறை தலா ட்ரில்லியன் டாலர் வளர்ச்சியை எட்டும் என்றும் குறிப்பிட்டார். 

தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் மிக வளர்ச்சி அடைந்து வருவதாகவும் 8 சதவீத வளர்ச்சி என்ற அடிப்படையில் பொருளாதார முன்னேற்றம் அடையும் என்றும் கூறினார். இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

கடந்த 4 ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து உள்ளதாகவும் அரசு அனைத்து துறைகளிலும் அக்கறை செலுத்தி வருவதாகவும் பிரதமர் கூறினார். 3 பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் அரசின் முடிவு குறித்து பேசிய அவர் நாட்டின் நலன் கருதி கடினமான முடிவுகளை எடுப்பதற்கு அரசு தயங்காது என்று குறிப்பிட்டார். 

பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக நாளை ஒடிசா செல்கிறார். கால்ஜாரில் உர தொழிற்சாலை மற்றும்  சர்ச் குடாவில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையம் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைக்கிறார். 

தேசிய அணல்மின் கழகத்தின் சுரங்கங்கள் மற்றும் நிலக்கரி எடுத்துச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே இருப்புப் பாதைகள் ஆகியவற்றையும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

You'r reading 5 டிரில்லியன் டாலர்- நரேந்திர மோடி நம்பிக்கை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை