விக்ரமின் ரஷ்ய படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறதா? கோப்ரா பட இயக்குனர் பதில்..

Vikrams Cobra director Ajay Gnanamuthu clarifies on huge rumour about the movie

by Chandru, May 10, 2020, 13:00 PM IST

கடாரம் கொண்டான் படத்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா, ஏற்கனவே இப்படத்தில் விக்ரமின் எட்டு விதமான கெட்டப் ஸ்டில்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்குகிறார். இவர் அருள்நிதி நடித்த டிமாண்டி காலணி. நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படங்களை இயக்கியவர்.


கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒரு சிலர் நெட்டில் இப்படம் பற்றி கிசுகிசு பரப்பினர். அதாவது ரஷ்யா நாட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது, ஆனால் கொரோனா தொற்று ஊரடங்கால் ரஷ்யாவில் நடத்த வேண்டிய படப்பிடிப்பை இங்கேயே கிரீன்மேட் பயன்படுத்தி நடத்த உள்ளதாகக் கூறப்பட்டது. இது பற்றி பதில் அளித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, அது இயலாத காரியம் என மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

You'r reading விக்ரமின் ரஷ்ய படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறதா? கோப்ரா பட இயக்குனர் பதில்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை