ஜோதிகாவும் இல்லை, சிம்ரனும் இல்லை.. சந்திரமுகி 2ல் லாரன்ஸ்க்கு ஜோடியாகிறார் பாலிவுட் நடிகை..
Bollywood actress to pair opposite Raghava Lawrence in Chandramukhi 2?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கி இருந்தார். பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோரும் இதில் நடித்திருந்தனர். இப்படத்தின் 2ம் பாக ஸ்கிரிப்படை ஏற்கனவே பி.வாசு தயாரித்து வைத்திருந்தார். ஆனால் 2ம் பாகத்தில் நடிக்க ரஜினி ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் சந்திரமுகி 2ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க ஒப்பந்தம் ஆனார். முதல் பாகத்தில் இடம்பெற்ற ரஜினியின் வேட்டையன் பாத்திரத்தில் லாரன்ஸ் நடிக்கிறார். இப்படத்தில் ஜோதிகாவே மீண்டும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த வேடத்தில் நடிக்கக் கேட்டு தன்னை யாரும் அணுகவில்லை என்று ஜோதிகா தெரிவித்திருந்தார். அதன் பிறகு சிம்ரன் பெயர் அடிபட்டது, அதுவும் உறுதியாகவில்லை.
தற்போது பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, சந்திரமுகி பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் கியாரா, ஹீரோயினாக நடித்திருந்தார்.சந்திரமுகி 2 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. லாரன்ஸ் ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரித்த காஞ்சனா 3 படத்தில் நடித்தார். அதே போல் சிவலிங்கா படத்துக்குப் பிறகு லாரன்ஸ் நடிக்கும் படத்தை 2வது முறையாக இயக்குகிறார் பி.வாசு. ராகவா லாரன்ஸ் நடிப்பில் திகில் படங்களாக உருவான முனி, காஞ்சனா முதல் பாகம் முதல் 3ம் பாகம் வரை ஹிட்டாக அமைந்து. சந்திரமுகி 2 திகில் கலந்த கதையாகவே உருவாகவிருக்கிறது.
You'r reading ஜோதிகாவும் இல்லை, சிம்ரனும் இல்லை.. சந்திரமுகி 2ல் லாரன்ஸ்க்கு ஜோடியாகிறார் பாலிவுட் நடிகை.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News