கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லும் விவகாரம்- அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

SC asks ED to inform it about dates for questioning KartiChidambaram

by Mathivanan, Jan 28, 2019, 15:15 PM IST

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லும் விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதி அமைச்சராக 2006-ல் ப. சிதம்பரம் பதவி வகித்த போது மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம், விதிமுறைகளை மீறி ஏர்செல் நிறுவனத்தில் ரூ3, 500 கோடி முதலீடு செய்தது. கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தின் உதவியால் இம்முதலீடு நடைபெற்றது என்பது வழக்கு.

அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் கார்ச்சி சிதம்பரம் மீது தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளன. இதனிடையே பிரான்ஸ், ஜெர்மனி செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், கார்த்தி சிதம்பரம், பிரான்ஸ் செல்ல அனுமதி வழங்கியது. ஆனால் அமலாக்கத்துறையோ கார்த்தியிடம் விசாரணை நடத்த வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த இருக்கும் தேதிகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You'r reading கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லும் விவகாரம்- அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை