சத்தான காய்கள் நிறைந்த தயிர் பச்சடி
vegetables raita Recipe
உடலுக்கு மிகவும் சத்து தரும் காய்கள் நிறைந்த தயிர் பச்சடி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துருவிய கேரட் -2
துருவிய பீட்ரூட் - 2
பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - 1
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
தயிர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1
கடுகு - அரைத் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
முதலில், கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, இஞ்சி, பச்சை மிளகாயை போட்டுத் தாளிக்கவும்,
பின்னர், வெங்காயம், கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காயுடன், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.
இந்த கலவை, நன்றாக ஆறியதும் அதனுடன் தயிரைச் சேர்த்துக் நன்றாகக் கலக்கவும்.
அவ்ளோதாங்க சுவையான காய்கள் நிறைந்த தயிர் பச்சடி ரெடி..!
You'r reading சத்தான காய்கள் நிறைந்த தயிர் பச்சடி Originally posted on The Subeditor Tamil
More Ruchi corner News