அசத்தலான சுவையில் மாம்பழ பாயாசம் ரெசிபி
Yummy Mango Payasam Recipe
வித்தியாசமான சுவையில் மாம்பழ பாயாசம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்...
தேவையான பொருட்கள்:
மாம்பழ விழுது - ஒரு கப்
மாம்பழத் துண்டுகள் - ஒரு கப்
பால் - கால் லிட்டர்
சர்க்கரை - 10 டீஸ்பூன்
பாஸ்மதி அரிசி - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி
பிஸ்தா
செய்முறை:
முதலில் ஊற வைத்த பாஸ்மதி அரிசியுடன, முந்திரி சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சுட வைக்கவும்.
அதில், அரைத்து வைத்த விழுதை சேர்த்து வேகவிடவும்.
தற்போது பால், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி கொதிக்கவிடவும்.
பால் கொதிவந்ததும் ஆறவிட்டு மாம்பழ விழுதை சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கிவிடவும்.
இறுதியாக, பொடித்த பிஸ்தா, மாம்பழ துண்டுகள் சேர்த்து பரிமாறலாம்.
சுவையான மாம்பழ பாயாசம் ரெடி..!
You'r reading அசத்தலான சுவையில் மாம்பழ பாயாசம் ரெசிபி Originally posted on The Subeditor Tamil
More Ruchi corner News