சூப்பரான ஈவ்னிங் ஸ்நாக்..கடலை பருப்பு போண்டா..
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடக் கூடிய கடலை பருப்பு போண்டா ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..
தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு - ஒரு கப்
வெங்காயம் - 1
பூண்டு பல் - 1
இஞ்சி விழுது - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
ஊறிய கடலைப்பருப்புடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கொர கொரப்பாக அரைத்தெடுக்கவும்.
பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு பருப்புக் கலவையை உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading சூப்பரான ஈவ்னிங் ஸ்நாக்..கடலை பருப்பு போண்டா.. Originally posted on The Subeditor Tamil
More Ruchi corner News