கஞ்சாவிற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் முதல் ஆசிய நாடு?

by Manjula, Sep 26, 2018, 16:52 PM IST

மருத்துவ குணம் வாய்ந்த கஞ்சா எண்ணெய் விற்பனை செய்த இளைஞருக்கு மலேசியாவில் கடந்த மாதம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழவே, அவரது தண்டனையை குறைப்பது குறித்து கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் கஞ்சாவை அந்நாட்டில் மருத்துவத்திற்கு பயன்படுத்த சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பது குறித்தும் பேசப்பட்டதாக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கஞ்சாவை மருத்துவத்திற்கு பயன்படுத்தும் வகையில் சட்டங்களை மாற்றி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து கஞ்சாவை மருத்துவத்திற்கு பயன்படுத்தும் வகையில் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் முதல் ஆசிய நாடாக மலேசியா உருவெடுக்கவுள்ளது

You'r reading கஞ்சாவிற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் முதல் ஆசிய நாடு? Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை