உ.பி.க்கு முதல்அரசியல் பயணம் சென்ற பிரியங்கா - காங்கிரசார் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு!

அரசியல் பொறுப்பேற்ற பின் முதன் முறையாக உ.பி.சென்ற பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்டம், பாட்டத்துடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

நேரு குடும்பத்தின் அடுத்த ஒரு பிரபலமாக பிரியங்காவும் அரசியலில் குதித்தார்.கடந்த மாத இறுதியில் காங்கிரஸ் கட்சியின் உ.பி. கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டதற்கு உ.பி.மாநில காங்கிரசார் உற்சாக துள்ளல் போட்டனர்.

கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்ட பின் முதன் முறையாக பிரியங்கா உபி.க்கு இன்று பயணமானார்.தனது சகோதரரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி, உ.பி.மேற்கு மாவட்ட பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோருடன் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோ சென்ற பிரியங்காவை வரவேற்க அம்மாநில காங்கிரசார் தடபுடல் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மலர்தூவி பிரியங்கா வரவேற்று சுமார் 25 கி.மீ தூரத்துக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். திறந்த வாகனத்தில் பிரியங்கா, ராகுல், சிந்தியா ஆகியோர் சென்ற போது வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News