உடல்நலக்குறைவால் மோடியின் சகோதரர் மனைவி மரணம்

PM Narendra Modis sister-in-law, Bhagwati, died today in Ahmedabad

by Sasitharan, May 1, 2019, 21:31 PM IST

பிரதமர் மோடியின் சகோதரர் மனைவி உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

பிரதமர் மோடியின் மூத்த சகோதரர் பிரகலாத் மோடி. இவர் அகில இந்திய நியாய விலைக் கடை விற் பனையாளர்கள் சங்க துணைத் தலைவராக இருந்தவர். இவர் நியாய விலைக்கடை ஊழியர்களின் கோரிக்கைக்காக மும்பையில் மிகப்பெரிய போராட்டம் தன் தலைமையில் நடத்தி பிரபலமானவர். சமீபத்தில் கூட தமிழகத்துக்கு விசிட் அடித்தவர் முக்கிய அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக மோடியின் சார்பாக அதிமுகவுடன் பேசிவிட்டு சென்றார். பின்னாளில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. இதில் இவரின் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் வாழ்ந்துவரும் பிரகலாத் மோடியின் மனைவி பகவதிபென் இன்று திடீரென மரணமடைந்தார்.

சமீபகாலமாக நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த பகவதிபென் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடல் தால்தேஜ் பகுதியில் உள்ள இடுகாட்டில் அவரது உடல் எரியூட்டப்படும் என பிரஹலாத் மோடி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரின் மறைவால் மோடி குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

You'r reading உடல்நலக்குறைவால் மோடியின் சகோதரர் மனைவி மரணம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை