சச்சினை பின்னுக்கு தள்ளிய தோனி: கருத்துக்கணிப்பில் தகவல்

Jul 27, 2018, 21:14 PM IST

தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியாவின் மிக பிரபலமான கிரிக்கெட் வீரர் பட்டியலில் தோனிக்கு முதல் இடமும், சச்சினுக்கு இரண்டாவது இடமும் கிடைத்துள்ளது.

இந்திய அணியில் இணைந்ததும் தனது முதல் போட்டியில் முதல் பந்திலேயே வெளியேறியவர் தோனி. பிறகு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதும் ஒரு நாள் போட்டி, டி20, மற்றும் சாம்பியன்ஸ் ட்ரோபி என மூன்று முக்கிய உலககோப்பைகளை இந்தியாவிற்கு தனது தலைமையில் பெற்று தந்த ஒரே கேப்டன் தோனி.

தனது ஹெலிகாப்டர் ஷாட் என்ற புது விதமான பேட்டிங்கை அறிமுகம் செய்து உலக கிரிக்கெட் ரசிகர்களை தனது பக்கம் திரும்ப வைத்தவர்.

அறிமுக போட்டிகளில் இவரது பேட்டிங் மட்டும் தனித்துவமானது அல்ல தோனியின் சிகை அலங்காரமும் மிக பிரபலம். தோனியின் நீண்ட தலைமுடி பல ரசிகர்களையும் அவரை போல சிகையை மற்ற வைத்துள்ளது.

கூடுதல் சிறப்பாக தோனியின் சிகை அலங்காரத்தை உலக தலைவர்களில் ஒருவரான பர்வேஸ் முஷாரப் இவரின் தலை முடி ஸ்டைலில் மயங்கி தோனியிடம் கோரிக்கை வைத்தார் உங்கள் சிகை அலங்காரத்தை மாற்ற வேண்டாம் என்று.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு ஒன்றில் இந்தியாவின் மிக பிரபலமான கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

அதில் தோனிக்கு முதலிடம் கிடைத்துள்ளது, சச்சின் இரண்டாம் இடம் பிடித்துள்ளார், தற்போதைய கேப்டன் விராட் கோலி மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

You'r reading சச்சினை பின்னுக்கு தள்ளிய தோனி: கருத்துக்கணிப்பில் தகவல் Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை