நான் இனிமே பேபி சாரா இல்லை

Now onwards am not Baby Sarah

by Mari S, Jun 27, 2019, 09:13 AM IST

தெய்வத் திருமகள், சைவம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல விருதுகளை குவித்த பேபி சாராவுக்கு இப்போ 14 வயதாகிறது.

பேபி சாராவில் இருந்து டீனேஜ் சாராவாக புரமோட் ஆகியுள்ளார்.
2011ம் ஆண்டில் வெளியான தெய்வத் திருமகள் படத்தில் அறிமுகமான பேபி சாரா, அந்த படத்தில் விக்ரமுக்கு மகளாக மழலை மாறா பருவத்தில் அழகுடன் நடித்து தமிழக மக்கள் மனங்களில் இடம்பிடித்தார்.

இந்நிலையில், சமீபத்தில் சீயான் விக்ரம் கட்டிக் கொண்டு சாரா எடுத்துக் கொண்டுள்ள புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

ஒரு லாங் கேப்பிற்கு பிறகு தந்தையுடன் மகள் என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ள அந்த புகைப்படம், பாசத்தின் வெளிப்பாடாக காட்சியளிக்கிறது.

மீண்டும் ஒரு படத்தில் சீக்கிரமே தந்தை மகளாக இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் இந்த புகைப்படத்தின் மூலம் அதிகரித்துள்ளது.

பிக்பாஸ் வீடு உறவுகளை வளர்க்கிறதா? அல்லது சண்டைகளை வளர்க்கிறதா? ஒரு டீட்டெய்ல் ரிவ்யூ!

You'r reading நான் இனிமே பேபி சாரா இல்லை Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை