அடுத்தாண்டு மே 17ஆம் தேதி ரிலீஸாகிறது ஜான் விக் - 3
அடுத்தாண்டு மே 17ஆம் தேதி ரிலீஸாகிறது ஜான் விக் - 3
ஜான் விக் ஹாலிவுட் பட வரிசையின் மூன்றாம் பாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸை புதிய பரிமாணத்தில் காண்பித்த படம் தான் ஜான் விக். கடந்த 2014ஆம் ஆண்டு டெரெக் கோல்ஸ்டாடின் எழுத்தில் இப்படத்தின் ஆதிக்கதை உருவானது. இந்த கதையை இயக்குநர் சாட் ஸ்டஹெல்கி திரைப்படமாக எடுத்து அதே ஆண்டில் திரைப்படமாக மாற்றினார்.
அதற்கு மக்களிடையே எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது. 2017ல் இரண்டாம் பாகமான ஜான் விக் Chapter 2 வெளியானது. முந்தைய பாகத்தை விடவும் அதிகமான செலவில் பிரம்மிக்கும் சண்டைக்காட்சிகளை உள்ளடக்கி வெளியாகியிருந்த இந்த படம் முதல் பாகத்தை போலவே ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றது.
தற்போது இப்படத்தின் தொடர்ச்சியான மூன்றாவது பாகம் முந்தைய பாகங்களை போலவே பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த மூன்றாம் பாகத்தின் டிரைலர் மற்றும் டீஸர் ஏதும் வெளியாகாத நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இதன்படி படம் அடுத்த ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading அடுத்தாண்டு மே 17ஆம் தேதி ரிலீஸாகிறது ஜான் விக் - 3 Originally posted on The Subeditor Tamil
More Cinema News