பெண் அதிகாரி மண்டை உடைப்பு எம்.எல்.ஏ. சகோதரர் கைது

TRS leader arrested for assaulting woman forest officer in Telangana

by எஸ். எம். கணபதி, Jul 1, 2019, 09:18 AM IST

தெலங்கானாவில் வனத்துறை பெண் அதிகாரியை கடுமையாக தாக்கி, மண்டையை உடைத்த எம்.எல்.ஏ.வின் தம்பி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அசிபாபாத் மாவட்டத்திலுள்ள சரசலா கிராமத்தில் பெண் வனச் சரக அலுவலர் சோலா அனிதா தலைமையில் வனத்துறை அதிகாரிகள், மரம் நடும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஜூன் 30ம் தேதி காலையில் வந்தனர். ஏற்கனவே அந்த பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை பழங்குடியின மக்கள் ஆக்கிரமித்து பயிர் செய்து வந்தனர். அந்த இடத்தை தற்போது வனத்துறை கையகப்படுத்தி, காளீஸ்வரம் பாசனத் திட்டத்திற்கு அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவாக ஆளும் டி.ஆர்.எஸ்.கட்சியைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் கோனேறு கிருஷ்ணா ராவ் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார். இந்நிலையில், வனத்துறை அதிகாரிகள் சரசலா கிராமத்திற்கு வந்த போது அவர்களுக்கு கிருஷ்ணாராவும், அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து தடுத்தனர். ஆனால், அதை வனத்துறை அதிகாரிகள் பொருட்படுத்தாமல் செல்லவே, அவர்களை கிருஷ்ணாராவின் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினர்.

இதில், வனச்சரக அதிகாரி அனிதாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பல ஊழியர்களும் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து, கிருஷ்ணாராவும், அவரது ஆதரவாளர்கள் 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இ.பி.கோ. 352, 332 உள்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. மல்லா ரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணா ராவ், ஆளும்கட்சி பிரமுகர் மட்டுமின்றி அக்கட்சியின் எம்.எல்.ஏ. கோனேறு கொன்னப்பாவின் சகோதரர் ஆவார். போராட்டத்திற்கு முன்பு, கிருஷ்ணா ராவ் தனது மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் விடுத்திருந்தார். தற்போது முதலமைச்சர் சந்திரசேகரராவ் அவரது பதவியைப் பறித்து விடுவார் என்று டி.ஆர்.எஸ். கட்சியினர் கூறுகின்றனர். சந்திரசேகரராவின் மகன் கே.டி.ராமாராவ், அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாக்கு எந்திரத்தைப் பற்றி முதலில் பேச வேண்டும்; மாயாவதி காட்டம்

You'r reading பெண் அதிகாரி மண்டை உடைப்பு எம்.எல்.ஏ. சகோதரர் கைது Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை