ஐபிஎல்: டாஸ்ல ஜெயிச்ச டெல்லி அணி மேட்ச்சையும் ஜெயிக்குமா?

Delhi Capitals won the toss and chose to bowl

by Mari S, May 8, 2019, 19:15 PM IST

ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றுப் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. டாஸ் ஜெயித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கப் ஜெயிக்காத டெல்லி அணி டெல்லி டேர்டெவில்ஸ் என்ற தனது பழைய பெயரை டெல்லி கேப்பிடல்ஸ் என்று மாற்றிக் கொண்டு இந்தாண்டு களமிறங்கியது.

கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் அசத்தலாக ஆடி வரும் டெல்லி அணி இதுவரை ஆடிய 14 லீக் போட்டியில் 9 போட்டியில் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இன்று டெல்லி அணியை எதிர்கொள்ளும் ஐதராபாத் அணி இதற்குமுன் ஐபிஎல் கோப்பை வென்றுள்ள அணியாக இருந்தாலும், இந்தமுறை விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் கஷ்டப்பட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ இல்லாததால், தடுமாறி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ஸ்ரேயாஸ் அய்யர் திறம்பட சமாளித்து இந்த போட்டியை வெற்றி பெற செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

You'r reading ஐபிஎல்: டாஸ்ல ஜெயிச்ச டெல்லி அணி மேட்ச்சையும் ஜெயிக்குமா? Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை