செயல்பாட்டை மேம்படுத்த புதிய ஏஐ திட்டம்: ஃபேஸ்புக்

Mar 14, 2021, 08:55 AM IST

ஃபேஸ்புக்கின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு கடந்த பல ஆண்டுகளாக அந்நிறுவனம் முயற்சித்து வருகிறது. பேச்சு, காட்சி மற்றும் மொழிகளை சுய கண்காணிப்பு முறையில் பின்தொடர்ந்து கற்றுக்கொள்ளும் முயற்சியை மேற்கொண்டு வந்தது. எல்லா நாடுகளிலும் நூற்றுக்கணக்கான மொழிகளில் உள்ள காணொலிகள் (வீடியோ) மூலம் கற்றுக்கொண்டு உள்ளடக்க பரிந்துரை மற்றும் கொள்கை அமலாக்கத்திற்கு உதவும்வண்ணம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கொடுக்கப்படும் குறைந்த தரவுகளை கொண்டு செயற்கை நுண்ணறிவு அமைப்பை (ஏஐ) மேம்படுத்துவது சவாலாக இருந்து வந்தது. தற்போது மனிதர்களைப் போல கிடைக்கும் எல்லா தரவுகளையும் கண்காணிக்கும் வசதியை ஃபேஸ்புக் செயற்கை நுண்ணறிவு அமைப்புக்கு அளித்துள்ளது.

காணொலி மூலம் கற்றல் (லேர்னிங் ஃபிரம் வீடியோஸ்) என்று இம்முறை அழைக்கப்படுகிறது. நெறிப்படுத்தப்படாத, யதார்த்த காட்சி மற்றும் ஒலிகளிலிருந்து செயற்கை நுண்ணறிவு அமைப்பு கற்றுக்கொண்டு தன்னை மேம்படுத்திக்கொள்ள இது வசதி செய்கிறது. அதற்குக் கொடுக்கப்படும் சிறிய, மிகக்குறைய எடுத்துக்காட்டுகளிலிருந்து கற்றுக்கொள்வதைக் காட்டிலும் இது அதிக உதவியாக அமையும்.

சமூக ஊடகங்கள் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பொதுவாக கிடைக்கும் கோடிக்கணக்கான நெரிப்படுத்தப்படாத படங்கள், வீடியோக்கள் மூலம் சுயகண்காணிப்பு முறையில் கற்றுக்கொள்ளும் இந்த செயற்கை நுண்ணறிவு திட்டத்திற்கு ஷீயர் (SEER - Self-supERvised) என்று ஃபேஸ்புக் பெயரிட்டுள்ளது. இதன் மூலம் வரும் காலத்தில் ஃபேஸ்புக்கின் செயல்பாடு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading செயல்பாட்டை மேம்படுத்த புதிய ஏஐ திட்டம்: ஃபேஸ்புக் Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை