வீடியோ போர்ட்டல்: ஃபேஸ்புக் அறிமுகம் செய்கிறது

காணொளி அழைப்புகளை செய்வதற்கு பிரத்தியேகமாக பயன்படுத்தக்கூடிய போர்ட்டல் பிளஸ் மற்றும் போர்ட்டல் ஆகிய சாதனங்களை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

15.6 அங்குல திரை கொண்ட சாதனம் போர்ட்டல் பிளஸ் என்றும் அதை விட சற்று சிறிய திரை கொண்ட சாதனம் போர்ட்டல் என்றும் அழைக்கப்படுகிறது.

கூகுள் ஹோம் ஹப் மற்றும் அமேசானின் எக்கோ ஷோ போன்ற சாதனங்கள், காணொளி அழைப்பு என்னும் வீடியோ காலுடன் வேறு அநேக பணிகளை செய்யக்கூடியவையாக இருந்தாலும், தரமான விதத்தில் காணொளி அழைப்பை செய்வதற்கு ஃபேஸ்புக்கின் போர்ட்டல் சாதனம் மிகவும் ஏற்றதாகும். உதாரணமாக ஹோம் ஹப் சாதனத்தில் இருவழிக்கான காமிராக்கள் கிடையாது. எனவே, அழைப்பை மேற்கொள்பவர் மட்டுமே மறுமுனையில் உள்ளவரை காண இயலும்.

ஸ்மார்ட்போன் மூலம் ஃபேஸ்புக் மெசஞ்சரை (Facebook’s Messenger)பயன்படுத்த முகநூல் கணக்கு தேவையில்லை. ஆனால் இப்புதிய சாதனத்தின் மூலம் பயன்படுத்த பயனருக்கு முகநூலில் கணக்கு இருக்க வேண்டும். தங்கள் சாதனங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகளை தாங்கள் கவனிப்பதோ, பார்ப்பதோ, பதிவு செய்வதோ இல்லை என்று முகநூல் நிறுவனம் கூறியுள்ளது. ஃபேஸ்புக்கின் உறுதிமொழியை நம்பினால் இந்த சாதனங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

கையடக்க கணினிகள் (tablets) போல் தூக்கிக் கொண்டு செல்லாமல் வரவேற்பறை, சமையலறை அல்லது படுக்கையறை என்று ஏதாவது ஓரிடத்தில் இதை நிலையாக வைத்து காணொளி அழைப்பை மேற்கொள்ள இது உதவுகிறது. போர்ட்டல் பிளஸ் 349 டாலர் விலையிலும் போர்ட்டல் 199 டாலர் விலையிலும் கிடைக்கும்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்