2019ஆம் ஆண்டுக்கான 12வது ஐபிஎல் தொடரை துபாயில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் அடுத்த ஆண்டு (2019) மார்ச் 29-ஆம் தேதி முதல் மே 19-ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுவதால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்றப்போவதாக பிசிசிஐ நிர்வாக குழு தரப்பில் கூறப்படுகிறது.
அவ்வாறு வேறு நாட்டிற்கு மாற்றப்பட்டால் இந்திய ரசிகர் களுக்காகப் போட்டி நேரத்தைக் கணக்கில் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
2009 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற போதும் தென் ஆப்பிரிக்கா மற்றும் துபாயில் ஐபிஎல் போட்டிகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.