வாழ்வில் வெற்றியடைய விட்டுகொடுக்க வேண்டியவை

To succeed in life, things to give up

by Vijayarevathy N, Nov 3, 2018, 07:52 AM IST

அனைவருக்கும் வாழ்க்கையில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற ஆசை உள்ளது. சிலர் கனவிலே வெற்றி அடைவார்கள், பலர் அதற்கான வழிமுறைகளை தேடிக் கண்டுப்பிடித்து அதற்கான செயலில் ஈடுப்படுவார்கள்.

நாம் வாழ்வில் வெற்றி அடைய இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று கூடுதலான செயல்களை சேர்க்க வேண்டும் என்று அவசியமில்லை, சிலவற்றை விட்டுகொடுத்தாலே போதும். எளிதில் வெற்றியை அடையலாம்.  சிலர் இன்றைய தினத்திலேயே அச்செயல்களை கைவிடலாம், ஆனால் மற்றவர்களுக்கு சிறிது காலம் எடுக்கத்தான் செய்யும்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை விட்டுக்கொடுங்கள். நமது வாழ்வில் வெற்றி அடைய இன்றியமையாதவை நோயில்லா உடம்பு. எவ்வளவு வெற்றிகள் அடைந்தாலும் நோய்க் கொண்ட உடம்பால் எந்த இன்பத்தையும் காண இயலாது. எனவே ஆரோக்கியமான உணவு முறையையும், உடற்பயிற்சியையும் மேற்கொள்ளுங்கள்.

இப்பொழுது இதுப்போதும் என்ற குறுகிய கால மனநிலையை கைவிடுங்கள்.
வெற்றிப் பெற எண்ணம் உடையவர்கள் நீண்ட கால இலக்கை கொண்டு வெற்றி அடைவார்கள். சிறு சிறு விளையாட்டை விட்டு விட்டு, உங்கள் கருத்துகளை தெரியப்படுத்துங்கள்.

முயற்சியுங்கள், வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முன்வாருங்கள். கனவு காணுங்கள். அக்கனுவுகளை நினைவாக்கி உங்கள் தகுதியை தெரிந்து கொள்ளுங்கள்.

சாக்கு சொல்வதை விட்டுக் கொடுங்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் அடையும் வெற்றிக்கும், தோல்விக்கும் நீங்களே காரணமாவீர்கள். யாரையும் சாக்கு சொல்லாதீர்கள்.

நிலையான மனநிலையை விட்டுக் கொடுங்கள். உங்கள் வெற்றிக்காக தினமும் உங்கள் புது புது முயற்சியை மேற்கொள்ளுங்கள். வெற்றிகான அணுகுமுறையை மாற்றுங்கள். அதிர்ஷ்டத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை விட்டுக் கொடுங்கள்.

உங்கள் பரிப்பூரனத்தை விட்டுக் கொடுங்கள். எதுவுமே சரியானதாக இருக்காது, நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி. சில குறைகளும் வெற்றிக்கு அழகுதான்.

வெற்றிக்காக உங்கள் தேவைகள் அனைத்தையும் விட்டுக்கொடுங்கள். உங்கள் வெற்றிக்கு இடையூராக இருக்கும் செயல்களுக்கு “ஆம்” என்று சொல்லும் பழக்கத்தை விட்டுக்கொடுங்கள்.

உங்கள் வெற்றியை தடுக்க நினைக்கும் நண்பர்களையும், உறவினர்களையும் விட்டுக் கொடுங்கள். உங்களின் வெற்றிக்கான நம்பிக்கை தன்மை சமூக வலைதளங்களினாலும், தொலைகாட்சிகளினாலும் தடுக்கப்படுமேயானால், அவற்றை விட்டுக்கொடுக்க துளிக்கூட தயங்காதீர்கள்.

You'r reading வாழ்வில் வெற்றியடைய விட்டுகொடுக்க வேண்டியவை Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை