சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் ஐந்து உச்ச நடிகர்கள்

Sivakarthikeyan movie updates

by Sakthi, Apr 15, 2019, 22:52 PM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தில் ஐந்து உச்ச நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

sivakarthikeyan

வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். ராஜேஷ் இயக்கிவரும் இப்படம் மே 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் ராதிகா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வெளியீட்டுக்கான இறுதிக் கட்டப் பணிகள் தற்பொழுது நடந்துவருகிறது. படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

மிஸ்டர் லோக்கல் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை வருகிற ஏப்ரல் 20ல் வெளியிடுகிறது படக்குழு. இந்தப் படத்தின் மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், தமிழில் சமீபத்திய உச்ச நடிகர்களான ஆர்யா, கார்த்தி, ஜீவா, ஜி.வி.பிரகாஷ் மற்றும் உதயநிதி உள்ளிட்டோர் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். அவர்கள் வரும் காட்சி நிச்சயம் ரசிகர்கள் விசில் பறக்க கொண்டாடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

You'r reading சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் ஐந்து உச்ச நடிகர்கள் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை