நம்மிடம் வேலைப் பார்க்கும் நிர்வாகி எப்படி விஷாலை தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்தார்? - பேரதிர்ச்சியில் தனுஷ்

Vishal to act in Dhanush production house employee

by Sakthi, Apr 27, 2019, 22:57 PM IST

தனுஷின் பட தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒரு நிர்வாகி, தற்போது விஷாலை வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளார்.

தனுஷ்

நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் நிறைய படங்களை தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரித்துவருகிறார் தனுஷ். தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்தை வினோத் என்பவர் தான் நிர்வாகித்துவந்தார். வினோத்தை நம்பி தனுஷ் மொத்த நிர்வாக பொறுப்பையும் கொடுத்திருந்தார்.

தனுஷின் படங்கள் மட்டுமல்லாது, வெளியில் வேறு சில படங்களிலும் பணியாற்றி வந்திருக்கிறார் வினோத். இந்நிலையில் புதிதாக ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார் வினோத். தனுஷிடம் பணியாற்றியவர் என்பதால், அவரை நாயகனாக வைத்து படம் எடுப்பார் என்று நினைக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. விஷாலை வைத்து படம் தயாரிக்கிறார் வினோத். அதற்காக விஷாலுக்கு ஒரு பெரும் தொகையை முன்பணமாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இயக்குநர், மற்ற நடிக நடிகைகள் தேர்வு விரைவில் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

மற்றுமொரு முக்கிய தகவல் என்னவென்றால், விஷாலை வைத்து வினோத் தயாரிக்கவிருக்கும் படம் குறித்த எந்த தகவலும் தனுஷூக்கே தெரியாமல் தான் நடந்திருக்கிறது. தனுஷூம் கொஞ்சம் அதிர்ச்சியிலும் வியப்பிலும் தான் இருக்கிறாராம். திடீரென தயாரிப்பாளராக வினோத் எப்படி உருமாறினார் என்ற சந்தேகமும் தனுஷூக்கு இருக்கிறதாம். வெற்றிப் படங்களைக் கொடுத்தாலும் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் தொடர்ந்து நஷ்டத்தில் தான் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதனால் தனுஷ் நிர்வாக கணக்குகளை பார்க்கவும் தொடங்கியிருக்கிறார் என்பது நமக்கு கிடைத்த கூடுதல் தகவல்.

You'r reading நம்மிடம் வேலைப் பார்க்கும் நிர்வாகி எப்படி விஷாலை தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்தார்? - பேரதிர்ச்சியில் தனுஷ் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை