நயன்தாராவுடன் இளம் நடிகர் சரண் இணைகிறார் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகிறது நெற்றிக்கண்
Actor Saran Shakthi lands a crucial role in Nayantharas Netrikann
நடிகை நயன்தாராவின் 65 வது படமாக உருவாகிறது நெற்றிக்கண். ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். மிலன்த் ராவ் இயக்குகிறார். இப்படத்தில் இளம் ஹீரோ சரண் சக்தியும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஜில்லா, வட சென்னை,போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.
நடிகை நயன்தாரா, நெற்றிக்கண் படம் தவிர சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டியில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்திருக்கிறார். ரஜினி ஜோடியாக தர்பார். விஜய்யுடன் பிகில் படங்களிலும் நடித்து வருகிறார். இதில் சைரா... படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது.
அட்லி இயக்கத்தில் பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து உருவாகும் பிகில் படம் அக்டோபர் 25ம் தேதி வெளியாகிறது. கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படம் 2020ம் ஆண்டு பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது.
You'r reading நயன்தாராவுடன் இளம் நடிகர் சரண் இணைகிறார் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகிறது நெற்றிக்கண் Originally posted on The Subeditor Tamil
More Cinema News