`நீங்க கேட்டா நாங்க நிலாவுக்கே கொண்டு வருவோம் - பெங்களூரு வாசியின் ஆர்டரும் ஸ்விக்கியின் 12 நிமிட குறும்புத்தனமும்..!

bangalore man orders food from Swiggy and it promises delivery from Rajasthan in 12 minutes

by Sasitharan, Feb 20, 2019, 22:11 PM IST

உணவை நாம் தேடிச்சென்ற காலம் போய் இந்த டிஜிட்டல் உலகில் உணவுதான் நம்மைத் தேடிவருகிறது. ஹோட்டல்களில் இருந்து வேண்டிய உணவுகளை ஆர்டர் செய்தால் போதும் குறித்த நேரத்துக்குள் உணவு நம் கைக்கு வந்துவிடும். இதற்காக டோர் டெலிவரி செய்யும் பணிகளில் ஸ்விக்கி, ஜொமேட்டோ, உபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் இல்லாத சாலைகளே இல்லை என்ற சூழ்நிலை உருவாகி வருகின்றன. கவர்ச்சிகரமான ஊதியம் என்பதால், முழு நேரம், பகுதி நேரம் என்று ஏராளமானோர் இந்த நிறுவனங்களில் பணியாற்றி தொடங்கினர். ஆனால் காலப்போக்கில் சம்பளம், படிகள் குறைக்கப்படவே இந்த ஊழியர்கள் இப்போது கஷ்டத்தில் உள்ளதாக புலம்பி வருகின்றனர்.

இந்த ஆப்களில் வசதிகள் இருக்கும் அதே நேரத்தில் குறைகளும் இருக்கின்றன. சில நேரங்களில் இந்த ஆப்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு டெலிவரி செய்வதற்கு தாமதமாகிறது. இது சில நேரங்களில் கோபங்களை வரவழைக்கும். இப்படியான நிலைக்கு தான் பெங்களூரு இளைஞர் ஒருவர் ஆளாகியுள்ளார். பெங்களூவில் வசிக்கும் பார்கவ் ராஜன் என்பவர் ஸ்விக்கி மூலம் தனக்கு உணவை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்ததும் ஆர்டர் எடுத்துக்கொள்ளப்பட்டதாக அவரது செல்போனுக்கு தகவல் வந்துள்ளது. ஆனால் வெகு நேரமாகியும் டெலிவரி பாய் வரவில்லை. அப்போது தான் ஆர்டர் செய்த விவரங்களை எடுத்தபார்த்த பார்கவ்வுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது, உணவு ஆர்டர் செய்தபிறகு காண்பிக்கும் மேப்பில் ராஜஸ்தானில் இருந்து உணவு வந்துக்கொண்டிருப்பதாகவும் இன்னும் 20 நிமிடங்களில் வந்துவிடும் என்றும் காட்டியுள்ளது. பெங்களூருவில் ஆர்டர் செய்த கடையின் அதேபெயரில் ராஜஸ்தானில் உள்ள உணவகம் ஒன்றில் தவறுதலாக ஆர்டர் பதிவாகியுள்ளது. இதனால் ஆர்டரை ரத்து செய்ய முயன்ற பார்கவ், ராஜஸ்தானில் இருந்து பெங்களூருவுக்கு ஸிவிக்கி டெலிவரி பாய் வருவதாக மேப் செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தார்.

பிரபாகரன் என்பவர் உணவை டெலிவரி செய்வார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து ஷாக்கான பார்கவ், அதை அப்படியே ஸ்கீன் ஷாட் எடுத்து ஸ்விக்கியை டேக் செய்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட அது பெரும் வைரலாகிது. இந்த ட்வீட் வைரலானதை பார்த்த ஸ்விக்கி தற்போது இந்த விவகாரம் குறித்து பதில் தெரிவித்துள்ளது. அதில், `இது குறும்புக்கார கடவுளின் வேலையாக இருக்கும். நகைச்சுவையைத் தாண்டி இந்த சர்ச்சை தொடர்பாக நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

இதுபோன்ற தவறு வரும் காலங்களில் நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம்’ என பதிவிடப்பட்டுள்ளது. ஸ்விக்கியின் இந்த செயல் குறித்து மீம்கள் ட்ரோல்கள் வர ஆரம்பித்தன. அப்படி ஒருவர் ``வெறும் 138 ரூபாய்காக ராஜஸ்தானில் இருந்து பெங்களுருக்கு உணவு வருகிறது. இது உங்கள் நம்பிக்கையை காட்டுகிறது’ என ஸ்விக்கியிடம் தெரிவிக்க, அதற்கு “உங்களுக்கு உணவு தேவைப்பாட்டால் நிலவிற்கு சென்றுக் கூட நாங்கள் மீண்டும் திரும்புவோம்’ என ஸ்விக்கி தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.

You'r reading `நீங்க கேட்டா நாங்க நிலாவுக்கே கொண்டு வருவோம் - பெங்களூரு வாசியின் ஆர்டரும் ஸ்விக்கியின் 12 நிமிட குறும்புத்தனமும்..! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை